திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கரீம்பாத் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடியிருப்பு பகுதியில் 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குபின் முரணாக பதிலளித்த வந்த அவர்கள், இறுதியில் பூனைகளை வேட்டையாட வந்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரையும் வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: மினி லாரி மீது கார் மோதிய விபத்து: மூவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்