திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாதனூர் திருமலைகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (54), கடந்த 15 ஆண்டுகளாக மாதனூரில் மோதி என்னும் பெயரில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகிறார். அதே போல் மோதி சிக்கன் கடையும் நடத்தி வருகிறார்.
இவர் மாதனூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. இவரிடம் கடந்த 2017ஆம் ஆண்டு வள்ளியம்மாள் (67) என்பவர் தனக்கு சொந்தமான மூன்றரை சென்ட் நிலப் பத்திர்ததை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
கரோனா ஊரடங்கில் பணத்தை கட்ட முடியாத சூழலில், இயல்பு நிலை திரும்பிய பிறகு அந்த பணத்தை அசலும் வட்டியும் சேர்த்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக கட்டியுள்ளார். இதையடுத்து தனது நிலப்பத்திரத்தை கேட்டபோது, இன்னும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று நிலப்பத்திரத்தை கொடுக்காமல் ஏழுமலை மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 11) வள்ளியம்மாள் முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏழுமலை மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ஆம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை விசாரணைக்காக அழைத்து செல்ல சென்றனர். அப்போது ஏழுமலை முன்னாள் நீங்க போங்க பின்னால் என் காரில் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய போலீசாரும் சென்றுள்ளனர். இந்த இடைவெளியில் ஏழுமலை டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் கட்சி தலைவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது