திருப்பத்தூர் : கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட விஷமங்கலம் பகுதியில் வசிப்பவர் வாசுதேவன் மகன் சரத்குமார் (31) இவரது மனைவி சைலா(23), இவர்களுக்கு கிரன் கவி (5) பிராங்ஜூ(3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்,சரத்குமார் நேற்று இரவு தன்னுடைய குழந்தைகளுடன் பேராம்பட்டு பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
தந்தை பலி
அப்போது விஷமங்கலம் பகுதியில் சென்மேரிஸ் பள்ளி வழியாக செல்லும் பொழுது திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த டெம்போ டிராவலர் மோதியதில் தந்தை சரத்குமார் மற்றும் குழந்தைகள் இருவரும் விபத்துக்குள்ளாகினர்.
அங்கிருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் தெரிவித்த பின்பு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூவரையும் அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தந்தை மற்றும் குழந்தைகள் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சரத்குமார் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீவிர சிகிச்சை
குழந்தைகள் இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து கிராமிய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருப்பத்தூரில் எருது விடும் விழா - 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு