திருப்பத்தார் மாவட்டம் புதுப்பேட்டை அருகேயுள்ள பாரதிநகரைச் சேர்ந்தவர் சித்திரவர்மன் ( 33 ). இவர் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாராயணன் ( 29 ) என்பவர் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அந்தப் புகாரில் நாராயணன் போலியான காவல் துறை அடையாள அட்டையை பயன்படுத்தி பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்திருந்தார்.
அதனடிப்படையில், 17 IPC ( பொது ஊழியருடைய சீருடை அல்லது அடையாள அட்டையை பொது ஊழியர் அல்லாதோர் பிறரை ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்துவது - 3 மாதங்கள்வரை சிறை தண்டனை ), 465 IPC ( பிறரை ஏமாற்றுதல் - 2 ஆண்டுவரை சிறை தண்டனை ), 468 IPC (ஏமாற்றுவதற்கென பொய்யான ஆவணத்தை தயாரித்தல் - 7 ஆண்டுவரை சிறை தண்டனை)- சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், போலி காவல் துறை அடையாள அட்டையை பயன்படுத்தி நாராயணன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, நாராயணனை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "அரசு ஊழியருடைய போலியான அடையாள அட்டைகள் , சீருடைகளை அரசு ஊழியர் அல்லாதோர் பயன்படுத்துவது, பிறரை ஏமாற்றுபவர் குறித்த தகவல்களை அந்ததந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
![போலி காவல்துறையினர் கைது... Thirupattur Fake Police ID Card Person Aressted போலி காவலர் அடையாள அட்டை இளைஞர் கைது திருப்பத்தூர் போலி காவலர் அடையாள அட்டை இளைஞர் கைது போலி காவலர் அடையாள அட்டை Fake Police ID Card Fake Police ID Card Youth Aressted](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6207004_trp1.jpg)
தகவல் அளிப்பவர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் / வாட்ஸ் ஆப் எண்ணான 9442992526க்கு புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதையும் படிங்க:வடிவேலுவை காப்பி அடித்த போட்டோக்களுக்கு ராஷ்மிகாவின் க்யூட் பதில்!