ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது - Fake doctor

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைதுசெய்யப்பட்டார்.

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது

author img

By

Published : Mar 26, 2022, 4:34 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ இணை இயக்குனராக புதியதாக மருத்துவர் மாரிமுத்து பதவியேற்றுள்ள நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள போலி மருத்துவர்களைக் கண்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது திருப்பத்தூர் அடுத்த தாமலேரி முத்தூர் பகுதியில் முருகன் மகன் சம்பத் (35) என்பவர் எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் செய்து வருவதாகத் தகவல் அறிந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

எம்பிபிஎஸ் மட்டும் போதாது: இவர் ஏற்கனவே ஒரு முறை போலி மருத்துவர் எனக் கைது செய்யப்பட்டு மீண்டும் அதே பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சம்பத்தை ஜோலார்பேட்டை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து பொதுமக்களிடம் கூறுகையில், “எம்பிபிஎஸ் முடித்து விட்டு தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி டிஎன்எம்சி-யிலும் பதிவு செய்ய வேண்டும் அதற்குப் பிறகு மருத்துவ பயிற்சி பெற்று முறையாக மருத்துவம் செய்ய வேண்டும்.

இது எதுவும் இல்லாத பட்சத்தில் எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து முடித்து இருந்தாலும் மருத்துவம் செய்ய தகுதியற்றவர். இது எம்பிபிஎஸ் க்கு மட்டும் பொருந்தாது பிடிஎஸ், பிஎச்எம்எஸ், நர்சிங் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவப் படிப்பிற்கும் பொருந்தும்” என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க:அய்யோ அதியசத்த பாருங்களேன்!.. தினமும் கோயிலில் மணி அடிக்கும் ஆட்டுக்குட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.