ETV Bharat / state

தீவிரவாதிகளுடன் தொடர்பு? ஆம்பூர் கல்லூரி மாணவரிடம் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை - Engineering student arrested

ஆம்பூரில் கல்லூரி மாணவிடம் மத்திய குற்றப்புலாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய உளவுத்துறை விசாரணை
மத்திய உளவுத்துறை விசாரணை
author img

By

Published : Jul 30, 2022, 8:19 AM IST

Updated : Jul 30, 2022, 12:16 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் நீலிக்கொல்லி பகுதியில் வசிக்கும் பொறியியல் கல்லூரி மாணவனிடம் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் திலக் நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24ஆம் தேதி மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்து விசாரணை நடத்தியது. அவர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலிம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த ஆசிப் , கருங்கல்பாளையத்தை சேர்ந்த யாசின் ஆகியோரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆம்பூரில் கல்லூரி மாணவிடம் மத்திய குற்றப்புலாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி விவரங்களை சேகரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

முதல் கட்ட தகவலாக மாணவன் லண்டன், மொராக்கோ போன்ற நாடுகளில் உள்ளவர்களிடம் இணையதளம் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பேசியவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? என்று மாணவனை அணைகட்டு காவல் நிலையத்தில் வைத்து 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஈரோட்டில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனை

Last Updated : Jul 30, 2022, 12:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.