ETV Bharat / state

மேடையில் மின்வெட்டு: அன்புமணி அப்செட்டு

திருப்பத்தூரில் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது மின்வெட்டு ஏற்பட்டதால் பாகம இளைஞர் அணி தலைவர் அன்புமணி அப்செட் ஆனார்.

அன்புமணி உரையின் போது மின்வெட்டு
அன்புமணி உரையின் போது மின்வெட்டு
author img

By

Published : Apr 28, 2022, 12:23 PM IST

திருப்பத்தூர்: பால்நாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர் எபி.சிவா தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அப்செட் ஆன அன்புமணி ராமதாஸ் சுமார் 8 நிமிடம் காத்திருந்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்ற போதிலும் மின்வெட்டு தொடர்ந்து வருகிறது.

இதற்கு தமிழ்நாடு அரசு சரியான திட்டமிடாததுதான் முழு காரணம். மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாட்டிற்கு சுமார் 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். ஆனால் தமிழ்நாடு மின் நிலையங்களில் தயாரிப்பது 5,500 மெகாவாட். மத்திய அரசு 4,500 மெகாவாட் தமிழ்நாட்டிற்கு கொடுக்கிறது. அதேபோல் தனியார் நிறுவனங்களில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் தமிழ்நாடு அரசு பெருகிறது.

அன்புமணி உரையின் போது மின்வெட்டு

மீதமுள்ள 4,500 மெகாவாட் மின்சாரம் பெறவேண்டிய திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதனை சரிசெய்தால் மின்வெட்டு பிரச்சனைகள் தீரும். 20 ஆண்டுகள் காலமாக யார் முதலமைச்சர் ஆனாலும் தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என கூறி வருகின்றனர். ஆனால் இதுவரை எவரும் செய்யவில்லை" என்றார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.