திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பேரூராட்சி 14வது வார்டு, மும்தாஜ் கார்டன் பகுதியில் சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளதாக, அப்பகுதி மக்கள் உதயேந்திரம் பேரூராட்சித் தலைவர் பூசாராணியிடம் கோரிக்கை மனு அளித்ததன் பேரில், உதயேந்திரம் பேரூராட்சி 14வது வார்டு பகுதிக்கு மூலதன மானியத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். அப்போது மின்கம்பத்தினை அகற்றி சாலை அமைத்திடாமல் மின் கம்பம் நடுவில் இருந்தபடியே புதிய தார் சாலை போட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குலசை தசரா திருவிழா; நரிக்குறவ தம்பதியின் 2 வயது பெண் குழந்தை கடத்தல்!
இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மின்கம்பம் இடையூறாக உள்ளதாகவும், விபத்து ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும், தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் தார் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் அம்மா உணவகம் பொருட்கள் வெளிசந்தையில் விற்பனை.. வைரலாகும் வீடியோ!