ETV Bharat / state

திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் - thirupattur news

திருப்பத்தூர் மாவட்டத்தில், 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பாதுகாப்பு குறித்து, தேர்தல் பொது பார்வையாளர் அவினேஷ் குமார் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் செய்திகள்
திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
author img

By

Published : Mar 18, 2021, 6:52 PM IST

வருகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டம், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் காவல் பொது பார்வையாளர் அவினேஷ்குமாருக்கு, தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் விவரித்தார்கள்.

திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

இக்கூட்டத்தின் முக்கிய குறிக்கோளாக தேர்தல் காவல் பொது பார்வையாளர் அவினேஷ்குமார் கூறுகையில், “திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளின் பலத்த பாதுகாப்பு குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். வாக்கு இயந்திரங்களைக் கொண்டு செல்லும்போதும், தேர்தல் முடிந்த பின்பு எடுத்து வரும்போதும் பாதுகாப்பாக கொண்டு வர வேண்டும்.

வாக்கு இயந்திரத்தை கொண்டுவரும் வாகனத்தின் முன்பும், பின்பும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பொது மக்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்” என பல்வேறு ஆலோசனைகளை கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன், நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் மற்றும் காவல் அலுவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ‘அனைவருக்கும் செல்போன், 20 லட்சம் வீடு என்ற அதிமுகவின் அறிவிப்புகள் என்னவானது?' - ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.