ETV Bharat / state

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை துரத்திக் கடித்த நாய்கள்! - கரோனா தற்போதைய செய்திகள்

திருப்பத்தூர்: தண்ணீர் அருந்த வனத்திலிருந்து வெளியே வந்த புள்ளிமானை, நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது.

தண்ணீர் தேடி வந்த புள்ளிமானைக் கடித்து குதறிய நாய்கள்!

author img

By

Published : Apr 24, 2020, 7:19 PM IST

ஆம்பூர் அருகே உள்ள ராள்ளக்கொத்தூர் காலனி கிராமத்தின் அருகே, பொன்னப்பல்லி வடக்கு பிரிவு துருகம் காப்புக் காடுகள் பகுதியிலிருந்து, வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் அடிக்கடி வந்து செல்கின்றது.

இந்நிலையில், இரண்டு வயது ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி அலைந்து, ஊருக்குள் நுழைந்தது. அப்போது, நாய்கள் புள்ளிமானை துரத்திக் கடித்தது. இதனைக் கண்ட மக்கள் நாய்களைத் துரத்தி புள்ளிமானை மீட்டனர்.

உடனடியாக, ஆம்பூர் வனச்சரக அலுவலர் மூர்த்திக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனக்காப்பாளர் ராஜ்குமார், வனக்காவலர் ஞானவேல் இருவரும் புள்ளி மானை மீட்டு, கரும்பூர் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே புள்ளிமான் உயிரிழந்தது.

கரும்பூர் கால்நடை மருத்துவமனையில் புள்ளிமானின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. ஆம்பூர் துருகம் காப்புக் காடுகள் பகுதியில், புள்ளிமானின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அடுத்த சாகுபடிக்கு மூலதனம் இல்லை: விவசாயிகளை புலம்பவைத்த ஊரடங்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.