ETV Bharat / state

"சாலையில் செல்லும் பெண்களிடம் ஃப்ரிட்ஜ் தருவதாகக் கூறி திமுகவில் சேர்க்கின்றனர்" - அமைச்சர் தாக்கு

author img

By

Published : Nov 22, 2020, 8:42 PM IST

திருப்பத்தூர்: திமுகவினர் சாலையில் செல்லும் பெண்களை அழைத்து தங்களுக்கு ஃப்ரிட்ஜ், டிவி வழங்குவதாக பொய் சொல்லி தங்கள் கட்சியில் உறுப்பினராக சேர்த்து வருவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார்.

அமைச்சர் நிலோபர் கபில்
அமைச்சர் நிலோபர் கபில்

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பெத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.வி சம்பத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அமைச்சர் நிலோபர் கஃபீல் கலந்துகொண்டு புதிதாக ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்தார். பிறகு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ப்பவர்களிடம் மனுக்களை பெற்றார்.

ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் நிலோபர் கபில்

அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் அராஜகம், கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம், காட்டன் சூதாட்டம், நில அபகரிப்பு உள்ளிட்டவை குறைக்கப்பட்டு, அமைதியான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

திமுகவினர் சாலையில் செல்லும் பெண்களை அழைத்து தங்களுக்கு ஃப்ரிட்ஜ், டிவி வழங்குவதாக பொய் சொல்லி, தங்கள் கட்சியில் உறுப்பினராக சேர்த்து வருகின்றனர். திமுக என்றாலே எப்போதும் பொய் பரப்புரை செய்வதுதான் வாடிக்கை.

அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நகை கடன் மற்றும் விவசாயக் கடன் ரத்து செய்வேன் என்று சொன்னார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. மேலும் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறி பரப்புரை செய்து, அதையும் மக்களுக்கு தராமல் ஏமாற்றி விட்டனர்.

ஆனால் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நகை விலை சவரனுக்கு 40 ஆயிரமாக உயர்ந்திருந்தாலும்கூட படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகிறது. மீண்டும் 2021இல் அதிமுக அரசையே மக்கள் ஆட்சியில் அமர வைக்க விரும்புகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: அடுப்படியில்கூட மீத்தேன் எடுக்க அனுமதியளித்தவர் ஸ்டாலின்; ஓ.எஸ்.மணியன் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.