திருப்பத்தூர்: அமைச்சர் கே.சி. வீரமணியை திமுகவினர் ஆபாச வார்த்தைகள் கூறி தாக்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.சி வீரமணி இன்று ஏலகிரி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட சென்றார். அப்போது அமைச்சருடன் கூட்டத்தில் வந்த ஒருவர், அதிமுக கட்சி துண்டு அணிந்து கொண்டு உள்ளே சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனை பார்த்துக்கொண்டிருந்த திமுகவினர், அதிமுகவினரிடம் கேள்வியெழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். அதோடு நில்லாமல் அமைச்சரை ஆபாச வார்த்தைகள் கூறி தாக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.