தமிழ்நாட்டில் கடந்த ஏழு நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. திருப்பத்தூர் அடுத்த சி.கே ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் 13 முதியவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் கிராமிய காவல் ஆய்வாளர் மதனலோகன், சமூக ஆர்வலர் பண்பு ஆகியோர் இணைந்து முதியவர்களுக்கு முகக் கவசம் பல வகையான பழங்கள் 25 கிலோ எடையுள்ள மூன்று மூட்டை அரிசி ஆகியவற்றை வழங்கினார்கள்.