திருப்பத்தூர் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் குறைதீர்வு நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில், 200 பேருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிவனருளை சந்தித்து மனு அளித்தனர்.
ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள், குருமன்ஸ் பழங்குடி இன மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பொதுமக்களின் குறைகளை தீர்வு செய்ய ஆய்வு செய்யும்படி ஆலோசனை வழங்கினார்.
அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பச்சூர் ஊராட்சி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான் கருவி, பயிர்களுக்கு பூச்சி மருந்து, விதைகள் மற்றும் மரக்கன்றுகள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
மேலும், முதியவர்களுக்கு உதவித்தொகை, ஐந்து பயனாளிகளுக்கு மற்றும் மூன்று பயணிகளுக்கு வீடுகள் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கபட்டது.