கரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கரோனை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் புதிதாக 70 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவுக்கு மக்கள் ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர். மக்கள் அதிகளவில் நடமாடினால் எச்சரித்து அனுப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள், ஒரு மீட்டர் இடைவெளியில் சென்று வாங்க வேண்டும். பொருள்களை விற்பனை செய்பவர்கள் அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்...