திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த குறும்பர் தெரு புத்துக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், வீடுகட்டி தனது மகன்கள் ஜெயக்குமார், கௌரேசன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்திற்கு அருகமையில் இளையராஜா காயந்த சருகுகளைப் போட்டி தீயிட்டுள்ளார். இதில், அண்ணாதுரை தனது நிலத்தில் பயிரிட்ட வாழைகள் தீயில் கருகின.
இதில் ஆத்திரமடைந்த அண்ணாதுரை, அவரது மகன்கள், இளையராஜாவிடம் இதுபோன்று தீவைக்க வேண்டாம் எனக்கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. பின்னர் இளையராஜா, தனது மருமகன் ராமகிருஷ்ணன், மகன் கலை ஆகியோருடன் சேர்ந்து வெளியூரிலிருந்து அடியாட்களை வரவழைத்து, அண்ணாதுரையின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தினர். அதோடு மட்டுமில்லாமல் வீட்டில் இருந்த நபர்களையும் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் அண்ணாதுரை புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன் விரோதம்: பூ வியாபாரி கொலை