திருப்பத்தூர்: வாணியம்பாடியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தரைக்காடு வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வனப்பகுதிக்குள் சாராயம் காய்ச்ச பேரல்கள் தயாராக வைத்திருப்பதைக் கண்டனர். அதன் பிறகு 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை ஊற்றி அழித்தனர்.
மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 2 அடுப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பைனான்ஸ் உரிமையாளர்