திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் கிறிஸ்தவ அருட்பணியாளர் ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2017ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த பீமா கோரேகான் கலவர வழக்கில் சுதா, பரத்வாஜ், கௌதம் நல்ல, வரவர ராவ் உள்ளிட்ட பேராசிரியர்கள், வழக்குறைஞர்கள், கவிஞர்கள் என 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின சமூகத்தின் முன்னேற்றத்திற்காக திருச்சியைச் சேர்ந்த தமிழ் கிருத்துவ பாதிரியார் கடந்த 40 வருடங்களாக தன்னுடைய தள்ளாத 83 வயதிலும் எழுதியும் பேசியும் போராடி வந்தார். இவரை மாவோயிஸ்ட் அமைப்போடு தொடர்புபடுத்தி பொய் வழக்குப்போட்டு பீமா கோரேகான் கலவர வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை கண்டித்தும் அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அரசியல் அமைப்புக்கள், சமூக இயக்கங்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமயதுறவிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் மனு அளித்தனர்.