ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் ஊட்டல் காப்புக்காட்டுப்பகுதியில் இருந்து, 3 வயதுடைய ஆண் மான் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள நாய்கள், மானை துரத்தி கடித்தன. இதில் மான் பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர், மானின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரும்பூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ரயில் சக்கரத்தில் சிக்கி ஆறு வயது சிறுமி உயிரிழப்பு