திருப்பத்தூர் மாவட்டம் தாசம்பட்டி ரயில்வே நிலையம் அருகில் கடந்த 28ஆம் தேதி 45 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவர் ஒருவர் சந்தேகப்படும்படி அமர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற ரயில் ஓட்டுநர், ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் வடமாநிலத்தைவரை மீட்டு அவரைப் பரிசோதனை செய்ததில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு கரோனா தொற்று இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மே 3ஆம் தேதி மாலை 3 மணி அளவில் சிகிச்சை பெற்று வந்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதார ஊழியர்கள், உயர் அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் குழுக்களாக செயல்பட்டு அவரை தேடிவந்த நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் அவர் நடந்து சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதனடிப்படையில் ரயில்வே போலீசார் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஒன்றிணைந்து அவரை பிடித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த கரோனா நோயாளி தப்பி ஓடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரோனா நோயாளி தப்பி ஓட்டம்! - கரோனா நோயாளி தப்பி ஓட்டம்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா நோயாளி, 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.