திருப்பத்தூர் மாவட்டம் கோணாமேடு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் அரவிந்தன் (26). ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் அர்ச்சனா (21).
இருவரும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்.
அப்பொழுது இவர்களுக்கிடையே இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது.
இதையறிந்த அர்ச்சனாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதை அறிந்த அரவிந்தன் சென்ற 17ஆம் தேதி நண்பர்களின் உதவியுடன் ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து இருவரும் சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் காதல் ஜோடிகள் தங்களது பெற்றோர்களிடம் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும்படி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேவாலய வாசலில் காதல் ஜோடி திருமணம்