திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 907 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 528 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
370 பேர் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இறப்பு 9 ஆக உள்ளது.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தினமும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் மூலம் நோய் தொற்று கண்டறிதல், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்குதல், முகக்கவசம் வழங்குதல் என மாவட்ட ஆட்சியர் சிவன் சுழற்சி முறையில் நேரடியாக கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள நகரப் பகுதிகளில் கொரோனா தொற்று 55 ஆக உள்ளது. மேலும் தொற்று பரவாமல் கட்டுபடுத்த வாணியம்பாடி நகர பகுதிகளில் உள்ள 36 வார்டுகளிலும் நகராட்சி ஆணையர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.