திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து செல்கிறது. வாணியம்பாடியில் இதுவரை 736 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வாணியம்பாடி கிளை சிறையில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றி வந்த சிறை முழுவதும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போது அவருடன் பணியாற்றி வந்த காவலர்கள், கைதிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறைத்துறை நிர்வாகத்தினருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கில்லி' நடிகரின் உயிரைப் பறித்த கரோனா!