திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் கடந்த 28 நாள்களாக இஸ்லாமியர்கள் ஹாகி பாக் என்ற பெயரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழ்நாடு அரசின் சார்பில் மார்ச் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் கூட்டமாக எந்த ஒரு நிகழ்ச்சியும் பங்கேற்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் வாணியம்பாடியில் நடைபெற்று வந்த தொடர் முழக்க போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதுவரையில் வாணியம்பாடி பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்கள் இல்லத்திலும், கருப்புக் கொடி ஏற்றி தங்களின் எதிர்ப்பை வெளிகாட்டுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சத்துணவு முட்டைகளை வெளி மார்க்கெட்டில் விற்றால் கடும் நடவடிக்கை!