வேலூர் மாவட்டம் கொணவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில், 4 வயது சிறுமி உள்பட மூவருக்கு கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அந்தக் குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் சண்முக சுந்தரம் வேண்டுகோள்விடுத்தார்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில், 60 வயதுடைய நபர் நேதாஜி சந்தையில் கடை வைத்துள்ளார். அவரின் கடைக்கு வந்துசென்ற நபர்களும் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பரிசோதனை முகாம்களுக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக, சி.எம்.சி.யைத் தவிர வேறு எந்த தனியார் மருத்துவமனைகளுக்கும், தனியார் கிளினிக்கிற்கும் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு...!