கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "கரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. இந்த ஊரடங்கானது மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை கடைப்பிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நாம் அதை இரவு 9 மணிக்கு முடித்துவிடாமல், மறுநாள் காலை 7 மணிவரை கடைப்பிடிக்க வேண்டும்.
அப்படிச் செய்து ஒற்றுமையாக அனைவரும் கடைப்பிடித்தால் கரோனவை ஒழித்துக்கட்ட முடியும். அதைத்தொடர்ந்து வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை அணிந்து செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் 100 விழுக்காடு கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பீதி: காத்து வாங்கும் மெரினா!