திருப்பத்தூர்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வணிகர் விடியல் மாநில மாநாடு திருச்சியில் மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. அனைத்து வணிகர்களும் கடைகளை அடைத்து இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என வாணியம்பாடி நகர் முழுவதும் ஒரு பிரிவினர் துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதனை எதிர்த்து வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சங்கத்தினர் மே 5 ஆம் தேதி கடை அடைப்பு இல்லை என துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதனால் இருதரப்பு வணிகர் சங்க உறுப்பினர்களுக்கிடையே வாணியம்பாடி புறவழிச்சாலையில் உள்ள உணவகம் அருகே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சந்திப்பு