திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் காலணி தொழிற்சாலைக்கு (பரிதா குழுமம்) சொந்தமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் காலணி தொழிற்சாலைகள் உள்ளன.
கடந்த செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நான்கு நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள கணக்குகளை ஆண்டுகள் வாரியாக கணக்கீடு செய்தும், காலணிகள் ஏற்றுமதி மற்றும் உதிரிபாகங்கள் இறக்குமதி குறித்த கணக்குகளுக்கான ஆவணங்களை அதிகாரிகள் சுழற்சி முறையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் அனைத்து ஆய்வு தற்போது முடிவுற்று முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம்.. மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும்.. அமைச்சர் எ.வ.வேலு