ETV Bharat / state

திருப்பத்தூரில் பெண்சிசு கொலையா? - கண்டறிந்த நபர் மீது சரமாரி தாக்குதல்! - tirupattur Femicide issue attack

திருப்பத்தூரில் கருவில் இருக்கும் சிசு பெண் என அறிந்ததும், அதனை மறைமுகமாக கலைத்து வந்ததை கண்டறிந்த நபரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூரில் பெண்சிசுகொலையா? - கண்டறிந்த நபர் மீது சரமாரி தாக்குதல்!

author img

By

Published : Feb 2, 2023, 9:18 AM IST

தாக்குதலில் பாதிக்கப்பட்ட சத்தியராஜ் பேட்டி

திருப்பத்தூர்: கவுண்டச்சியூரை சேர்ந்தவர் சத்தியராஜ் (28). இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அருகில் உள்ள காக்கங்கரைக்கு வேலை காரணமாக சத்தியராஜ் மற்றும் அவரது அண்ணன் சிவகானந்த் ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள், சத்தியராஜ் யார் என்று கேட்டு, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதனிடையே அருகில் இருந்த நபர்கள் வர, மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள், காயமடைந்த சத்தியராஜை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரில், வெங்களாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் சத்தியராஜ் கடந்த 2 வருடங்களுகு முன்பு வேலை செய்துள்ளார். அந்த நேரத்தில் ராச்சமங்கலத்தைச் சேர்ந்த ஜோதி மற்றும் சதீஷ் ஆகியோர் கருவில் இருக்கும் குழைந்தை ஆணா அல்லது பெண்ணா என கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருகலைப்பு செய்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் தெரிந்த சத்தியராஜ், கடைக்கு வேலைக்குச் செல்லாமல் நின்றுள்ளார். பின்னர் கருக்கலைப்பில் ஈடுபட்ட ஜோதி மற்றும் சதீஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணம் சத்தியராஜ்தான் என்று அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளனர்.

அப்போது ஒருமுறை இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வந்தபோது, ‘அந்த போனை உடையுங்கள். அவனை அடித்து காலி செய்யுங்கள்’ என்று கூறியுள்ளனர். இந்த நிலையில்தான் சத்தியராஜ் தாக்கப்பட்டு, அவரது செல்போனும் உடைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுக கவுன்சிலரின் கணவர் வீடு புகுந்து தாக்குதல் - வீடியோவால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.