திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 21 நாள்களாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய மாநில அரசை கண்டித்தும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடைகளை அடைத்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என வாணியம்பாடி ஷாஹீன் பாக் போராட்ட குழு அறிவித்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... சிஏஏவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியல்