திருப்பத்தூர்: ஆம்பூர் மாதனூர் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கூலி தொழிலாளி. இவரது இளைய மகள் மோகனா (15) தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த்துள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 16) மதியம் வழக்கம் போல் வீட்டில் ஆன்லைன் வகுப்பில் இருந்துள்ளார். அப்போது பீரோவிற்கு அடியில் இருந்த எலியை கையால் விரட்ட முயன்றுள்ளார். அப்போது, கையில் ஏதோ கடிதத்தை உணர்ந்த மோகனா, உடனடியாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மோகனா வாந்தி எடுத்து உள்ளார். இதனையடுத்து உறவினர்கள் மீண்டும் மாதனுர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோகனாவ தூக்கி சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். .
பின்னர் உறவினர்கள் வீட்டிற்கு சென்ற போது, பீரோவுக்கு அடியில் சுமார் 4 அடி நீள நாகப்பாம்பு இருந்ததும், அது மோகனாவை கொத்தியதும் தெரியவந்துள்ளது. பின்னர் பாம்பு அடித்து கொல்லப்பட்டது. இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் சிரிக்க வைத்தவர் விவேக்' - இயக்குநர் அமீர் இரங்கல்!