கரோனா வைரஸ் தொற்று தாக்குதலில் இருந்து பொதுமக்களை காத்திடும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 144 தடை உத்தரவின் கீழ் திருப்பத்தூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து இயங்கிட அனுமதி அளிக்கப்படடுள்ளது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் இயங்கிவரும் தேநீர் கடைகளில் அரசு தெரிவித்துள்ள தூர இடைவெளியினை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக இருந்தனர். எனவே அரசு உத்தரவுக்கிணங்க தேநீர் கடைகளில் பொதுமக்களின் தேவையற்ற கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை 6 மணி முதல் மாவட்டத்தின் அனைத்து தேநீர் கடைகளையும் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.