மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்றுவரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக வாக்காளர்களின் பெயர் உள்ளதா எனச் சரிபார்க்க முகாம்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இன்று (ஜன.4) திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் பல்வேறு இடங்களில் நேரடியாக வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து வீட்டிலுள்ள நபர்களிடம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேரடியாக சேர்ந்து பல்வேறு இடங்களில் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவருடன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சுமதி மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர் திருமலை ஆகியோர் இருந்தனர்.
இதையும் படிங்க: இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது!