ETV Bharat / state

தமிழ்நாடு-ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை!

திருப்பத்தூர்: நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருப்பத்தூர் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Collector inspection
Nivar cyclone
author img

By

Published : Nov 25, 2020, 10:38 PM IST

தமிழ்நாடு-ஆந்திர எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் நிவர் புயல் இன்று (நவ. 25) இரவு கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி அங்குள்ள நீர்நிலைகளை ஆய்வு மேற்கொண்ட பின், மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள குடிசை வீடு, சிமெண்ட் கூரை வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், சமுதாய கூடத்தில் பாதுகாப்பாக தங்குமாறு அறிவுரை கூறினர்.

மேலும், நிவாரண முகாம்களில் தங்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் ஆம்பூர் மோட்டுக்கொல்லை, சலாவுதீன் நகர் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதி மக்களுக்கு நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன் ஒலிபெருக்கி மூலம் அறிவுரை வழங்கினார்.

அப்போது, வட்டாட்சியர் பத்மநாபன், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நலங்கிள்ளி உதவி அலுவலர் தினகரன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.