ETV Bharat / state

நாட்றம்பள்ளி 41ஆவது துணை மின் நிலையம் இன்று திறப்பு - நாட்றம்பள்ளி 41ஆவது துணை மின் நிலையம் இன்று திறப்பு

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி 41ஆவது துணை மின் நிலையத்தை முதலமைச்சர் இன்று (டிச.7) காணொலி வாயிலாக திறந்து வைத்தார்

துணை மின் நிலையம் இன்று திறப்பு
துணை மின் நிலையம் இன்று திறப்பு
author img

By

Published : Dec 7, 2020, 6:37 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் நேரலையில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 624 ரூபாய் மதிப்பில் 41ஆவது துணை மின் நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் தோல் தொழிற்சாலை, அகர்பத்தி தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது. அத்துடன் விவசாயத்திலும் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமடைந்த மாவட்டமாகும். இத்தகைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது.

வீட்டு உபயோகத்திற்காக சுமார் மூன்றரை லட்சம் மின் இணைப்புகளும், தொழிற்சாலைகளுக்கான பத்தாயிரம் மின் இணைப்புகளும், விவசாயத்திற்காக சுமார் 50 ஆயிரம் மின் இணைப்புகளும் இதர இணைப்புகளாக சுமார் ஒரு லட்சம் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்திற்கும் மின்சாரம் தற்போது உள்ள 40 துணை மின்நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தற்போது புதிதாக நாட்றம்பள்ளியில் 41ஆவது துணை மின் நிலையம் 110/33 கி.வோ. 2×16. MVA திறன் கொண்ட மின் மாற்றிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது

துணை மின் நிலையத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர்

இந்தப் புதிய துணை மின் நிலையத்தின் மூலம் 15 கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் வீட்டு இணைப்புகள் , 3 ஆயிரம் தொழில் மின் இணைப்புகள், 4 ஆயிரத்து 500 மின் விவசாய இணைப்புகள், இதர 2 ஆயிரத்து 500 நுகர்வோர்கள் பயன்பெறும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜ், திருப்பத்தூர் செயற்பொறியாளர் கிருஷ்ணன் மற்றும் ஏஞ்சலினா மேரி, நவ்ஷாத், ஜெயந்தி ராணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.