திருப்பத்தூர்: தமிழ்நாடு முழுவதும் நீர் பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதன்படி திருப்பத்தூர் மாவட்டம் தண்டபாணி கோவில் தெருவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை.
இந்த பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த எதிர்ப்பை மீறி இன்று (டிசம்பர் 20) விடியற்காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் -கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற அரசு பேருந்து சிறைபிடித்தனர். இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நகராட்சிக்குட்பட்ட கடைகளில் கொள்ளை முயற்சி.. இளைஞர் கைது..