திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா கரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில் நேற்று (மே 03) வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை வேளையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு கிராமத்து பெண்கள் கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சிரசு வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் இரவு 10 மணி முதல் வீதி வீதியாக உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை வழங்கி சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டனர். கரோனாவுக்கு பிறகு திருவிழா நடந்ததால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:பூத புரீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்