கர்நாடகா மாநிலம், பெங்களூரு எஸ்.ஆர்.கே. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ஆரிப் புல்லா.
இவர் குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மீண்டும் பெங்களூரு நோக்கி நேற்றிரவு (ஜூன்.27) சென்றார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த தேவிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்த போது, மின்கசிவு காரணமாக காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே காரிலிருந்து கீழே இறங்கியுள்ளனர்.
பின்னர் ஆரிப் புல்லா அதனைச் சரிபார்த்துக் கொண்டிருந்த போது திடீரென கார் எரியத் தொடங்கியுள்ளது. உடனே அவர் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.
இருப்பினும் தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி மளமளவெனக் கொழுந்து விட்டு எரிந்தது நாசமானது.
மேலும் காரில் இருந்த அனைவரும் முன்கூட்டியே இறங்கியதால், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞர் கைது