திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆம்பூர் அடுத்த மோட்டுக் கொள்ளை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு நள்ளிரவு 2 மணி அளவில் ஆம்பூர் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது ஆம்பூர் தேவலாபுரம் பாலாற்றின் பாலத்தை கார் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலாற்று தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது.
அங்கு முட்புதர்கள் நிறைந்திருந்ததால், கார் கீழே விழுந்தும் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். பின்னர் காரில் இருந்து வெளியேறிய காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலின் பெயரில் நகர காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைக்கு பின் காரை மீட்டனர். இதனால் பாலாற்று பாலத்தின் ஒரு பக்கத்தில் 20 அடிக்கும் மேலாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறும் முன் இதனை விரைந்து சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விமானத்தில் புகைபிடித்த பயணி போலீசில் ஒப்படைப்பு