ETV Bharat / state

வள்ளிப்பட்டு எருதுவிடும் விழா: 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு! - bull fighting news

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற எருது ஓட்டப் போட்டியில் 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின.

வள்ளிப்பட்டு மஞ்சுவிரட்டு
வள்ளிப்பட்டு மஞ்சுவிரட்டு
author img

By

Published : Feb 14, 2021, 12:56 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.

இப்போட்டியின் விதிப்படி விழா அரங்கில் இருந்து அவிழ்த்துவிடப்படும் காளைகள் குறிப்பிட்டுள்ள இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து ஓடினால், அது வெற்றி பெற்ற காளையாக அறிவிக்கப்படும். அதன்படி நிம்மியம்பட்டு சரவணன் என்பவர் காளைக்கு முதல் பரிசாக ரூ.70 ஆயிரமும், சோமனநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கபீர் என்பவரின் காளைக்கு இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரமும், மூன்றாம் பரிசாக மிட்டூர் பகுதியைச் சேர்ந்த செளந்தரராஜன் என்பவர் காளைக்கு ரூ.50 ஆயிரமும் என மொத்தம் 38 பரிசுகள் வழங்கப்பட்டன.

வள்ளிப்பட்டு எருதுவிடும் விழா

மேலும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சார்பில் சிறப்பு பரிசாக முதல் இடம் பிடித்த காளை உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரமும், இரண்டாம் இடம்பிடித்த காளை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், வெளியூர் இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு விழாவை கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க...அதிகரிக்கும் புலிகளின் எண்ணிக்கை: கர்நாடகாவுக்கு 2ஆவது இடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.