ETV Bharat / state

குடிபோதையில் அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி - brother killed by brother because in family problem

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் அண்ணனை தம்பி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் அருகே குடிபோதையில் அண்ணனை தம்பி வெட்டி படுகொலை

author img

By

Published : Jan 13, 2022, 7:47 PM IST

திருப்பத்தூர் அடுத்த ஆவல்நாய்க்கன்பட்டி சோளச்சூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரின் மகன்கள் கோவிந்தராஜ் (42), கனகராஜ் (40). இவர்கள் மரம் ஏறும் தொழில் செய்துவந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு (ஜனவரி 12) தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து கனகராஜன் மனைவி பூங்கொடி (39) பூ கட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவிந்தராஜ் வழியிலேயே அமர்ந்துகொண்டிருந்த பூங்கொடியிடம் தன்னுடைய வீட்டிற்குச் செல்ல வழிவிடுமாறு கேட்டுள்ளார்.

இது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறில் குடிபோதையிலிருந்த கோவிந்தராஜ் பூங்கொடியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து நடந்த சம்பவங்களை தன்னுடைய கணவர் கனகராஜிக்கு பூங்கொடி போன் செய்து கூறியவுடன், கோபத்தின் உச்சத்தில் வீட்டிற்கு வந்த கனகராஜும் கோவிந்தராஜை மரமேறி கிளைகளைக் கழித்துவிடும் கத்தியால் வெறித்தனமாக வெட்டியுள்ளார்.

இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து கோவிந்தராஜ் இறந்துள்ளார். சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் கந்திலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்துவந்த கந்திலி காவல் துறையினர் கோவிந்தராஜின் சடலத்தைக் கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் கனகராஜை கைதுசெய்து, வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். குடிபோதையில் தம்பியே அண்ணனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: குண்டு பாய்ந்து இறந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.