ETV Bharat / state

அனுமதியின்றி கூட்டம் நடத்திய பாஜகவினர்? - கிராம நிர்வாக அலுவலர் புகார் - tiruppattur district news

திருப்பத்தூர்: பாஜகவின் அணி பிரிவு, மாவட்ட பிரிதிநிதிகள் மாநாட்டை உரிய அனுமதியின்றி நடத்தியதாக கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் புகாரளித்தார்.

பாஜக
பாஜக
author img

By

Published : Jan 3, 2021, 12:26 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் நேற்று மாலை (ஜன.2) பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக திருப்பத்தூர் மாவட்ட அணி பிரிவு, மற்றும் மாவட்ட பிரிதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை உரிய அனுமதியின்றி நடத்தியதாக ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாஜக
பாஜக

புகாரின் பேரில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வாசுதேவன், மாநில தலைவர் முருகன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாநில இளைஞரணி செயலாளர் கே.டி.ராகவன், பாஜக கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மீது தடையை மீறி கூட்டம் நடத்தியதற்காவும், உரிய அனுமதி பெறாததற்காவும் 188,144, 269, 270, 51 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் 5 வருடங்களாக அலைகழிக்கப்படும் குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.