திருப்பத்தூர்: சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் தயாகர் என்பவர் அவரது மனைவி சசிமாலா மற்றும் அவரது மகன்கள் ஆல்வின் பிரசாத், சரத் பாபு உடன் ஒசூர் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். இந்த கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் தயாகர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டாக்கத்தியுடன் பேருந்தில் பயணித்த ‘ரூட்டு தல‘ கைது