ETV Bharat / state

சுழன்றடித்த சூறாவளி காற்று; அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ - auto damaged in rain

திருப்பத்தூரில் 100 ஆண்டு பழமை வாய்ந்த பூவரசமரம் விழுந்ததில் ஆட்டோ ஒன்று அப்பளம் போல் நொறுங்கியது.

சுழன்றடித்த சூறாவளி காற்று; அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ

author img

By

Published : May 10, 2022, 6:04 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட கௌதம பேட்டை 6-வது தெருவில் வசிப்பவர் குணாளன் மகன் ரஞ்சித் (48). கடந்த 30 வருடங்களாக ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் வழக்கம்போல நேற்று இரவு தன்னுடைய வீட்டின் அருகாமையில் ஆட்டோவை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார்.நேற்றைய தினம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை, பச்சூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கர சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.

சுழன்றடித்த சூறாவளி காற்று; அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ
இந்நிலையில் ரஞ்சித் நிறுத்தி விட்டுச் சென்ற ஆட்டோவிற்கு அருகாமையில் இருந்த 100 ஆண்டு பழமை வாய்ந்த பூவரச மரம் நேற்று வீசிய சூறாவளி காற்றின் தாக்கத்தால் சாய்ந்து ஆட்டோ மீது விழுந்ததால் ஆட்டோ பலத்த சேதமடைந்து அப்பளம் போல் நொறுங்கியது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜீவ் காந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர் சுந்தரி ஆகியோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ரஞ்சித்துக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: திருப்பத்தூர் புதிய அலுவலகத்தில் பதிவுத்துறை குறைதீர்க்கும் முகாமினை தொடங்கி வைத்த ஐஜி சிவனருள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.