ETV Bharat / state

வாணியம்பாடியில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: கணக்கில் வராத பணம் பறிமுதல்! - டிஎஸ்பி ஹேமா சித்ரா

திருப்பத்தூர்: வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 94 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல்செய்யப்பட்டது.

வாணியம்பாடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு  Anti-corruption department raid in Vaniyambadi  Vigilance Raid In Vaniyambadi  வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகம்  Vaniyambadi Sub Register Office  டிஎஸ்பி ஹேமா சித்ரா  DSP Hema Chitra
Vigilance Raid In Vaniyambadi
author img

By

Published : Dec 15, 2020, 10:23 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இங்கு தினந்தோறும் நடைபெறும் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளுக்காக அலுவலகப் பணியாளர்கள் கையூட்டுப் பெறுவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தது.

இந்நிலையில், நேற்று மாலை (டிச.14) லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமா சித்ரா தலைமையிலான அலுவலர்கள் வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, நள்ளிரவு 2 மணி வரை பத்திர எழுத்தாளர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து 8 மணி நேரம் நடைபெற்ற இச்சோதனையில் கணக்கில் வராத 94 ஆயிரம் ரூபாய், ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.