வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் அலுவலகங்கள், அதே துறையைச் சேர்ந்த மேலும் 4 அலுவலகங்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, முறைகேடாக பணபரிமாற்றம் நடைபெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி லட்சுமிகாந்தன் (வேலூர் பொறுப்பு) தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர், 4 அலுவலகங்களிலும் நேற்று (நவ.12) மாலை ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். நள்ளிரவு வரை நடந்த இச்சோதனையில் பட்டாசு பெட்டிகள், சுமார் 25 கிலோ அளவுக்கான இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது பணம் உள்ளிட்டவை ஏதும் கைபற்றப்படவில்லை. தொழிலக பாதுகாப்பு, சுகாதார துணை இயக்குநர் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனை வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!