திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் சுமார் 126 தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிவருகின்றனர். இங்கு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் தூய்மை மேற்பார்வையாளர் பி. ரமேஷ் சுமார் 12 ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார்.
மேற்பார்வையாளர் ரமேஷ், அநாகரிகமாய் பேசுவது, ஒருமையில் பேசுவது, அவதூறாகப் பேசுவது எனப் பணியாளர்களிடம் நடந்துகொள்கிறார். இவருக்கு இதற்கு முன்னரே ஒரு பணியிட மாற்றம் அளித்தார்கள்.
ஆனால், பணத்தின் மூலம் அங்கு செல்லாமல் சரிசெய்துவிட்டார். ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க எத்தனை கடிதத்தை பணியாளர்கள் அனுப்பியுள்ளார்கள். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல், ரமேஷ் அரசின் டீசல், பெட்ரோல், ப்ளீச்சிங் பவுடர், கிருமி நாசினியை வெளியே விற்று லாபம் பார்த்து பணம் சேமித்துவருவதாகவும் கூறப்படுகிறது.