திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 16ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், அவரது மகன், மருமகன், வருவாய் கோட்டாட்சியரின் கணவர் உள்பட 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலோஃபர் கபில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
பின்னர், பூரண குணமடைந்த நிலையில், சென்னையில் உள்ள தன்னுடைய தாய் வீட்டில் ஒரு வாரமாக தனிமைப்படுத்திக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 6) சென்னையிலிருந்து வாணியம்பாடி திரும்பிய அமைச்சருக்கு, அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிமுகவினர் பூங்கொத்து கொடுத்தும் மாலை அணிவித்தும் வரவேற்பளித்தனர்.
அதேபோன்று அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி அமைச்சருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியதால் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், சால்வை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் பிரமாண்ட வரவேற்பளித்தனர்.
இதையும் படிங்க: 'கலைஞரின் கடைசி யுத்தம்' நூல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியீடு