திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கரீம் பாஷா, ஆம்பூர் நகராட்சியைக் கண்டித்து தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆம்பூர் நகராட்சி முழுவதும், உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சரி செய்யவேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபடுவதாக கரீம் பாஷா தெரிவித்தார்.
மேலும், பெத்தலேகம் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி ஆம்பூரில் இருந்து நடந்தே சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், போராட்டத்தைக் கைவிடும்படி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், நகராட்சி ஆணையரின் பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்து கரீம் பாஷா தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் மகளிர் காவல் நிலையங்களில் குழந்தைகளுக்கான மனமகிழ் கூடம்