டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களைக் கண்டறியும் முனைப்பில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டதாகவும், அதில் 14 பேர் அங்கிருந்து திரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
எஞ்சியுள்ள 22 பேரில் ஆம்பூர் மருத்துவமனையில் 10 பேரும், வாணியம்பாடி மருத்துவமனையில் எட்டு பேரும், திருப்பத்தூர் மருத்துவமனையில் நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அனைவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில், ஆம்பூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 10 பேரில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று ஏற்பட்டுள்ள ஏழு பேரையும் தனிப்பிரிவில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அந்த அறை வழியாக யாரும் வராத வண்ணம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரோனா தனிப்பிரிவிற்காக வாணியம்பாடி, ஆம்பூர், நாற்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 285 படுக்கையறைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் மற்றும் இதர கட்டடங்களில் 580 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
பழங்குடியின குடும்பத்தினருக்கு அறுசுவை உணவு படைத்த கோவில் நிர்வாகம்!